இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஏற்றம் தரும் பட்ஜெட் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய பட்ஜெட் மிகவும் சிறப்பான பட்ஜெட் என்றும், பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து கொரோணா பாதிப்பில் இருந்து இந்தியாவை மீட்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் வேலைவாய்ப்புகளை உருவாக்கி சிறு குறு தொழில்களுக்கு உதவும், விவசாயிகளுக்கும் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அனைவருக்கும் முன்னேற்றத்தைக் கொடுக்கும் பட்ஜெட்டாக இது இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறார்.
இதைத்தவிர தமிழ்நாட்டைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். தென்னிந்திய மாநிலங்கள், கிழக்கு இந்திய மாநிலங்கள் மற்றும் வட இந்தியாவில் உள்ள காஷ்மீர், லே போன்ற பல்வேறு பிராந்தியங்களுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களிலும், அதேபோலவே மேற்கு வங்காளம், அசாம் போன்ற மாநிலங்களில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை பிரதமர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
குறிப்பிட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என பிரதமர் மோடி கூறினார். அதேபோலவே சுகாதாரம், குடிநீர் போன்ற பல்வேறு முக்கிய விஷயங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியதோடு நிர்மலா சீதாராமன் பாராட்டி இருக்கிறார். இந்த பட்ஜெட் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா புதிய வளர்ச்சி பாதைக்கு செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.