Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வியாபாரி…. கிராம மக்களின் புகார்…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் வேடசந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்கள் பகுதியில் வசிக்கும் துணி வியாபாரி ஒருவர் தீபாவளி சீட்டு, ஏல சீட்டு நடத்தியுள்ளார். அவரிடம் ஏராளமானோர் ஏல சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளனர். கடந்த 8- ஆம் தேதி வியாபாரி தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார்.

எனவே சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட வியாபாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அந்த மனுவை பெற்று கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவுபடி வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |