Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி…. பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி சென்னியப்பன் வீதியில் ஆனந்தி, பாபு, செல்வி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் இணைந்து நடத்திய ஏலச்சீட்டில் 10-க்கு மேற்பட்டோர் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் தவணை காலம் முடிந்த பிறகும் அவர்களுக்கு சீட்டு தொகை வழங்காமல் 3 பேரும் காலம் தாழ்த்தி வந்தனர்.

சுமார் 40 லட்ச ரூபாய் வரை 3 பேரும் இணைந்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் பாபு உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |