ஈபிள் டவரின் படிக்கட்டு ஒன்று நாளை ஏலத்திற்கு விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ், உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தை பார்ப்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அந்த அளவிற்கு இந்த கோவில் கோபுரம் மக்களிடையே மிகவும் பிரபலமானது .கடந்த 1889ம் வருடம் இந்த கோபுரம் அமைக்கப்பட்ட போது படிக்கட்டு ஒன்று விற்பனைக்கு வந்தது. இதையடுத்து இரண்டாவது தளத்தில் இருந்து மூன்றாவது தளத்திற்கு செல்லக் கூடிய படிக்கட்டுகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக 1983ம் வருடம் மின்சார லிப்ட் அமைக்கப்பட்டது.
அப்போது அகற்றப்பட்ட படிக்கட்டுகளில் ஒன்று தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. ஈபிள் கோபுரத்தில் இருந்து ஏற்கனவே அகற்றப்பட்ட படிக்கட்டுகளில் 20 படிக்கட்டுகள் முன்னரே ஏலத்தில் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை மறுபடியும் ஒரு படிக்கட்டு ஏலம் விடப்பட உள்ளது. இந்த படிக்கட்டின் உயரம் சுமார் 1.6 மீட்டர் எனவும் இதன் விலை ரூ.26,56,920 – ரூ.35,42,280 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.