உலகிலேயே மிகவும் அரிதான ஒன்றான கருப்பு நிற வைரக்கல் மக்களின் பார்வைக்காக முதன்முறையாக துபாயில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த கருப்பு நிற வைரக்கல் அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் துபாயில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த கருப்பு நிற வைரக்கல்லுக்கு “எனிக்மா” என்று பெயரிடப்பட்டுள்ளது.
சுமார் 555 கேரட் எடையுள்ள அந்த வைரம் கிட்டத்தட்ட 270 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சிறுகோள் அல்லது விண்கல் பூமியின் மீது மோதிய போது உருவாகி இருக்கலாம் என்று ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது. இந்த வைரம் 55 முகங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த வைரம் சுமார் 37 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் என்று ஏல நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுவரை இந்த வைரம் யாரிடம் இருந்தது என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.