விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மை என்பது ஆய்வில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உலகில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் புது புது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. அதில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகள் வெற்றி கண்டுள்ளன. விஞ்ஞானிகள் நாளுக்கு நாள் புதிய ஆராய்ச்சி பற்றிய அறிவிப்புகளை வெளியிடுகின்றன. அதன்படி வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விண்வெளி பற்றிய விஷயங்களை விலக்கிக் கொள்ளும் அளவுக்கு மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைவதற்காக அவை காத்திருக்கின்றன.
அதன் பிறகு தங்கள் இருப்பை வெளிப்படுத்தும் என்றும் அமெரிக்க அரசுக்கும் வேற்று கிரக வாசிகளுக்கும் இடையே ஒப்பந்தம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் செவ்வாயின் நிலத்துக்கு கீழ் கூட்டாக ஆய்வின் ஈடுபட்டுள்ளதாகவும், டொனால்ட் ட்ரம்ப்க்கும் இது தெரியும் என்று பரபரப்பைக் கிளப்பியுள்ளனர். இந்த தகவலை இஸ்ரேல் விண்வெளி பாதுகாப்பு துறையின் முன்னால் தலைவர் ஷையம் எஷாத் வெளியிட்டுள்ளார்.