Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏழரை சனி 1 மாசத்துக்கு இருக்கும்…. கட்சியை அழிக்கவே மறுபிறவி எடுத்திருக்காரு……… Kovai Selvaraj காட்டம்….!!!!

எடப்பாடி பழனிச்சாமி கட்சியை அழிப்பதற்கு மறு பிறவி எடுத்து வந்துள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “குறுக்கு வழியில் இபிஎஸ் என்று முதலமைச்சராக வந்தாரோ, அன்றே அதிமுக நான்கு அணிகளாக உடைந்துவிட்டது. கட்சியில் யாரையும் மதிக்காமல், அவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க முடியாமல், அதிமுகவில் உட்கட்சி பூசல் நடந்து வருவது வேதனையாக உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி ஒருவரை பொறுத்தவரை அவர் அதிமுகவின் கொள்கைக்காகவோ லட்சியத்திற்காகவோ வாழவில்லை. கட்சியை வளர்ப்பதற்கும் அவர் வாழவில்லை. அவர் கட்சியை அழிப்பதற்கு என்றே ஒரு பிறவியை எடுத்து வந்திருக்கிறார். அதனால் அந்த ஏழரை நாட்டு சனி இந்த ஒரு மாதத்திற்கு இருக்கும் பாத்துக்கோங்க. அறிவோடு திரும்பி வந்து கட்சியோடு சேர்ந்து வேலை செய்யுங்கன்னு சொல்றோம் திருந்தவே முடியாதுன்னு சொன்னா என்ன செய்வாங்க. ஒன்னு வீட்டுக்கு அடங்கணும். இல்லனா ஊருக்கு அடங்கனும் இரண்டுக்கும் அடங்காதவர்கள் யாரோ ஒருவரிடம் மாட்டி அடங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |