இலங்கையில் ஏற்படும் மின் வெட்டினால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது. இது நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு அகல பாதாளத்திற்கு சென்றுள்ளது. இதனால் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள் கலை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எரிபொருள் இல்லாததால் மூன்று அனல் மின் நிலையங்களில் செயல்பாடுகள் அனைத்தும் முழுமையாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக மின் பற்றாக்குறை அதிகரித்து மின்வெட்டு தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் இலங்கையில் நேற்று முன்தினம் 7.30 மணிக்கு மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்வெட்டினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க முடியவில்லை. இதனை தொடர்ந்து இந்த மின்வெட்டு நீடித்தால் இலங்கை மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் அபாய சூழ்நிலை நிலவுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு மின்வெட்டு அமல்படுத்துவது இதுவே முதன்முறையாகும். இலங்கையில் கடந்த 60 ஆண்டு கடுமையான மின்வெட்டு ஏற்பட்டது. அப்போது மின் தேவைக்காக 80 சதவிகிதம் நீர்மின் நிலையங்களை இலங்கை சார்ந்து இருந்தது. கடந்த வருடம் கடும் வறட்சியின் காரணமாக நீர்நிலைகள் வறண்டு போனது. இதனால் மின் உற்பத்தி தடைபட்டு கடுமையான மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.