நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் கோவில் சார்பாக நடைபெறும் திருவிழாக்கள் சாமி ஊர்வலம் போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த தமிழக அரசு தடை விதித்திருந்தது. மேலும் கோவில் நடை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே திறக்கப்பட வேண்டும் எனவும் அறநிலைத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது நோய் தொற்று குறைந்து இருப்பதால் அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் திருப்பதி தேவஸ்தானத்தில் வருடத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.
இதற்கான பக்தர்கள் வசதிக்கு ஏற்ற முறையில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் கோவில் நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு டிக்கெட்டுகள் சேவை டிக்கெட் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் சர்வ தரிசனம் மூலமாக மட்டுமே சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. மேலும் கோவில் நிர்வாகம் நாளை காலை இலவச அங்க பிரதட்சணம் டோக்கன்கள் இணைய மூலமாக விநியோகிக்கப்படும் என கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக அங்க பிரதட்சணம் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது தொற்று குறைந்திருப்பதால் சென்ற மாதம் முதல் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இதற்கான டோக்கன்கள் இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்துள்ள நிலையில் இதனை கண்டித்து கோவில் முன் அங்க பிரதட்சணம் செய்து போராட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஜூலை 20ஆம் தேதி காலை 11 மணி முதல் இதற்கான கவுண்டர்கள் திறக்கப்பட்டு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. ஆகஸ்ட் மாதத்தின் வெள்ளிக்கிழமைகள் தவிர அனைத்து தினங்களிலும் தல ஆயிரத்து 500 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் பெண்களுக்கு 750 ஆண்களுக்கு 750 என இலவச டோக்கன்கள் விநியோகிக்கப்படுகிறது. அதனால் பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்ய பயன்படுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.