Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமா….? இன்று காலை 10 மணி முதல்…. பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்கதர்களுக்கு ரூ.300 டிக்கெட் இன்று காலை 10 மணி முதல் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மக்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |