Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் கோவிலின் விலை உயர்ந்த ஆபரணங்கள்… பொதுமக்கள் பார்வைக்கு விரைவில்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விலை உயர்ந்த நகைகள் முப்பரிமாணத்துடன் பக்தர்கள் கொண்டுவருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மன்னர்கள் காலம் முதல் இன்று வரை தங்கம், வைரம், வைடூரியம் மற்றும் மாணிக்கம் என பல்வேறு விலை உயர்ந்த நகைகள் காணிக்கைகளாக வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வழங்கப்பட்ட காணிக்கையான 450க்கும் மேற்பட்ட ஆபரணங்கள் ஏழுமலையான் சுவாமிக்கு அலங்கரிக்கப்படுவது வழக்கமாகும்.

இந்நிலையில் அந்த ஆபரணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், அதற்கு பல்வேறு விதிகள் தடைகளாக இருந்தன. அதற்குப் பின்னர் மாற்று ஏற்பாடாக முப்பரிமாண வடிவில் பக்தர்கள் பார்வைக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பக்தர்கள் குறைவாகவே அனுமதிக்கப்பட்டு வருவதால், இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட பணிகளை விரைந்து முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Categories

Tech |