Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் கோவிலில்…. மார்ச் மாதம் ரூ. 125 கோடி காணிக்கை வசூல்…. தேவஸ்தானம்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அப்போது அவர்கள் அனைவரும் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். அதனைப்போலவே வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முடிகாணிக்கை செலுத்தி வருகிறார்கள். கொரோனா காரணமாக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினந்தோறும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் நாள்தோறும் 300 ரூபாய் ஆன்லைன் கட்டண தரிசனத்தை 30,000 பக்தர்களும், இலவச தரிசனத்தில் 30 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.இவற்றுடன் விஐபி பிரேக் தரிசனம் உள்ளிட்டவற்றை சேர்த்து மார்ச் மாதம் மட்டும் மொத்தம் 19.72 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.மேலும் பக்தர்கள் மொத்தம் 125 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு மார்ச் மாதம்தான் மீண்டும் இந்த அளவுக்கு உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் கூறியுள்ளது.

Categories

Tech |