ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் ஒன்றை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் உள்ளது. மேலும் இது உலகப் பிரசித்திப் பெற்ற கோவிலாக உள்ளது. இந்நிலையில் இக்கோவிலுக்கு உள்ளூரில் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும், மேலும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏழுமலையான் கோவிலில் வரும் மே மாதம் தரிசனம் செய்வதற்காக, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கோட்டாவானது நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கு என தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதனை தொடர்ந்து தரிசனம் செய்ய வரும், மூத்த குடிமக்களின் வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நீண்ட கால தீராத நோய் உள்ளவர்கள் ஆகியோர் தங்களது மருத்துவ சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும். ஆகவே பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு டிக்கெட்டினை முன்பதிவு செய்யும்படி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.