Categories
தேசிய செய்திகள்

“ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்”….. சென்னை டூ திருப்பதி ஸ்பெஷல் பேருந்துகள்…..!!!!

திருப்பதிக்கு தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அரசு பேருந்து அல்லது தனியார் பேருந்துகள் மூலமாக தற்போது திருப்பதிக்கு சென்று வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் காளஹஸ்திக்கு சென்று தரிசனம் செய்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து திருப்பதிக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாவது: “வழக்கத்தைவிட நடப்பாண்டு சற்று தாமதமாக கோடை விடுமுறை தொடங்கி யுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள். அதேசமயம் சுற்றுலாத்தலங்கள், கோவில்களுக்கு செல்வதற்கும் மக்கள் படையெடுப்பார்கள். குறிப்பாக சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் தமிழக பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தற்போது இந்த வழித்தடங்களில் 30% பயணிகள் அதிகமாக பயணிக்கின்றன. இதனால் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வார இறுதிநாட்களில் முக்கியத்துவம் அளித்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று 50 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 50 பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை அன்று 50 பேருந்துகளும், திங்கள்கிழமையன்று 50 பேருந்துகள் என மொத்தம் 200 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்”.

Categories

Tech |