திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் மக்கள் கோவிலுக்கு தினம்தோறும் வருகை தருவதால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் இலவச டோக்கன் மற்றும் 300 ரூபாய் கட்டண டோக்கன் வழங்கி தரிசனத்திற்கு அனுமதி வழங்கி வருகிறது.
இந்நிலையில் திருமலை மற்றும் திருப்பதி தேவஸ்தானம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்களுக்கு தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கும் நடைமுறையை நிறுத்தியது. இன்னும் நவம்பர் மாதம் முதல் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் நாள்தோறும் பக்தர்களுக்கு வழங்கும் நடைமுறை தொடங்கியுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்த டோக்கன் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ஸ்ரீனிவாசன் மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜ சுவாமி தரிசனம் 2 ஆகிய இடங்களில் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் சனி,ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் தலா 25,000 துவக்கங்களும் வாரத்தின் மற்ற நாட்களில் தலா 15,000 துவக்கங்களும் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இலவச டோக்கன் பெற்றுக் கொண்ட பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்திற்கு சென்றால் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.