Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு குஷியான அறிவிப்பு… பிரம்மோற்சவ விழாவிற்கு தயாரான திருப்பதி தேவஸ்தானம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பாதையை சீரமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்செய்து வருகின்றனர். இவர்கள் திருப்பதி வந்தவுடன் அரசு பேருந்து அல்லது தனியார் வாகனங்கள் மூலம் திருமலைக்கு செல்கின்றனர்.அதோடு அலிபிரி நடைபாதை வழியாக நடந்தும் செல்கின்றனர்.

இந்த அலிபிரி நடைபாதை ஆனது 7.6 கிலோ மீட்டர் நீளம் உடையதாகவும் உள்ளது. இந்த நடைபாதையின் மேற்கூரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்காங்கே சேதம் ஏற்பட்டு காணப்பட்டது. இதை கவனித்த ஐ. வி. சுப்பாரெட்டி தலைமையிலான தேவஸ்தான அறங்காவலர் குழு சேதமடைந்த மேற்கூரைகள் சீரமைத்து அழகிய வேலைப்பாடுடன் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான முதல் கட்ட வேலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான பொறியியல்துறை ஈடுபட்டுவருகிறது.

அலிபிரி நடைபாதையை சீரமைக்க 25 கோடி வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது, இதனை அடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஒட்டு மொத்த தொகையையும் நன்கொடையில் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட திருப்பதி தேவஸ்தானம் நடை பாதை சீரமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது.

Categories

Tech |