Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட ஷாக் நியூஸ்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனினும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆந்திர மாநிலத்தில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் மலைப்பாதை இன்று மற்றும் நாளை வரை மூடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாதயாத்திரையாக இரண்டு நாட்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |