Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ஜனவரி 18 முதல் திருச்சி-திருப்பதி விமான சேவை….!!!!

வருகிற ஜனவரி 18 முதல் திருச்சியில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நேரடி விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.

திருச்சியிலிருந்து நேரடியாக திருப்பதிக்கு விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கி உள்ளது. வருகிற ஜனவரி 18ஆம் தேதி முதல் இந்த சேவை தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் செவ்வாய், புதன், ஞாயிறு,வெள்ளி ஆகிய நான்கு நாட்களும் மாலை 5 மணி அளவில் திருப்பதியில் இருந்து கிளம்பும் விமானம் மாலை 6.30 மணி அளவில் திருச்சியை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. மீண்டும் மாலை 6.40க்கு புறப்பட்டு 8 மணிக்கு திருப்பதியை வந்தடையும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |