Categories
மாநில செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….. மீண்டும் விரைவில்…. சம்மர் ஸ்பெஷல்….!!!!!!!

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பதியில் கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகிய இரு வழிமுறைகளில்  பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்  இலவச தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால்  தள்ளு,முள்ளு ஏற்பட்டு மூன்று பக்தர்கள் காயமடைந்தனர். இதனை அடுத்து இலவச தரிசன டோக்கன் வழங்கும் வழக்கமான நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் நேரடியாக அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் இலவச தரிசனத்திற்கு டோக்கன் வழங்கும் நடைமுறையை மீண்டும் கொண்டுவர திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் முடிவு செய்திருக்கிறது. கோடை விடுமுறை என்ற காரணத்தினால் திருப்பதியில் தற்போது பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருப்பது தவிர்க்கும் பொருட்டு இலவச தரிசனத்திற்காக டிக்கெட்டுகளை மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் டிக்கெட் வழங்கப்படும் பூமா தேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி சத்திரம்,சீனிவாசம் ஆகிய மூன்று கவுண்டர்களில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கவும், நிழற்குடைகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் டோக்கன் விநியோகம் விரைவில் தொடங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |