அக்னிபாத் எனும் இந்த திட்டத்தின் மூலமாக ராணுவத்தில் மூன்று படைப் பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் அக்னி வீர் எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட இருக்கின்றனர். இதற்கான திட்டத்தை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்துள்ளது. மேலும் இந்திய ராணுவத்தில் இளமையான வீரர்கள் இருக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இவர்கள் நான்கு வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே இந்தத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் தமிழகம், ஆந்திரா, பீகார், உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். மேலும் பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய மாவட்டங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு போராட்டம் வன்முறையாக மாறியுள்ள திட்டத்திற்கு எதிராக ஆந்திர மாநிலத்தில் பெரிய அளவில் போராட்டம் நடைபெறவில்லை என்றாலும் ஆங்காங்கே சிறிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாடு தழுவிய பந்த் காரணமாக திருப்பதியில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப் பட்டிருக்கிறது. அதனையொட்டி திருப்பதியில் பஸ், ரயில் நிலைய பகுதிகளில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை.
அந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். மேலும் கூட்டங்கள் ஊர்வலங்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும் எனினும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எந்த இடையூறும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும். அதேபோல் பக்தர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. திருப்பதியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள் வழக்கம்போல் செயல்படுகிறது. மேலும் திருப்பதியில் ரயில் நிலையம், தபால் நிலையம் உள்ளிட்ட மத்திய அரசுக்கு சொந்தமான அலுவலகங்களுக்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.