சனிக்கிழமை வீட்டில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் ,வடிவு தம்பதியினர். மாரியப்பன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இத்தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் இவர்களிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே பார்த்துள்ளனர்.
அங்கு கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர். இது குறித்து தச்சநல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை இருவரின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து தம்பதியின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று விசாரித்து வருகின்றனர்.