தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
அரசனோ ஆன்டியோ ஒவ்வொருவரின் வாழ்விலும் தந்கம் நீங்காத அங்கமாகி விட்டது என்றே கூறவேண்டும். அதிலும் இந்தியர்களின் வாழ்வியலில் குறிப்பாக தமிழர்களின் வாழ்வியலில் திருமணம் உள்ளிட்ட எந்தவித சடங்கு சம்பிரதாயங்களாக இருந்தாலும் நீக்கமற நிறைந்திருக்கும். ஆனால் இன்றைய நிலையில் தங்கம் ஏழை நடுத்தர குடும்பங்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. கொரோனா பரவலின் காரணமாக பல்வேறு தொழில்களும் முடங்கிய நிலையிலும் கூட தங்கத்தின் விற்பனை அதிகரித்ததோ இல்லையோ தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது.
மேலும் உயர்ந்து கொண்டே செல்லலாம் தங்கத்தின் விலை அதிகரிப்பானது இந்த அளவுக்கு இருக்கும் என்று அதனை விற்பவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு அதன் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. அதிலும் இந்த 2020 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை கணிக்கமுடியாத அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த இருப்பவர்களுக்கு குறிப்பாக ஏழை நடுத்தர மக்களிடம் கலகலப்பை தாண்டி கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சவரன் 5 ஆயிரம் ரூபாய் என்றிருந்த நிலையில் இன்று ஒரு கிராம் 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் இப்போது வரை மட்டும் அதாவது இந்த ஆறரை மாதகாலத்தில் மட்டும் ஒரு சவரனுக்கு 9750 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆயிரத்தை கடந்து தங்கத்தின் விலை பிப்ரவரி மாதம் சுமார் 31000 கடந்து. இது படிப்படியாக நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து இன்று 40 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இந்த விலை உயர்வுக்கு பொருளாதார வளர்ச்சியில் நிலைத்தன்மையற்ற சூழல் நிலவுவதால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தின் மீது முதலீடு செய்வதே காரணம் என்கின்றனர் விற்பனையாளர்கள். இதன் மீதான முதலீடு தொடர்ந்து வருவதால் தங்கத்தின் விலையானது வரும் காலங்களில் மீண்டும் உயரக் கூடும் என்கின்றனர்.