Categories
தேசிய செய்திகள்

ஏழைகளுக்கு 90 லட்சம் சிலிண்டர்கள் இலவசமாக வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு!

ஏழைகளுக்கு 90 லட்சம் சிலிண்டர்கள் இலசவமாக வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் பொதுமேலாளர் சிதம்பரம் அறிவித்துள்ளார். மாதம் 30 லட்சம் வீதம் ஏழைகளுக்கு 90 லட்சம் சிலிண்டர்கள் வழங்கப்படும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42000த்தை தாண்டி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 859295 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் இந்த வைரசால் 38 பேர் உயிரிந்துள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கொரோனா வைரஸால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பினை ஈடுசெய்ய பல்வேறு தரப்பினர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களிடம் நிவாரண நிதி கொடுத்து உதவி வருகின்றனர். அந்த வரிசையில் இந்தியன் ஆயில் நிறுவனம் ஏழைகளுக்கு 90 லட்சம் சிலிண்டர்கள் இலசவமாக வழங்க திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |