Categories
மாநில செய்திகள்

ஏழைகள் பாவம் சும்மா விடாது!…. அதிமுக-வை அழிக்க நினைத்தால்…. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு….!!!!

அவதூறு பரப்பி அதிமுக-வை அழிக்க நினைத்தால் அது கானல் நீராகத் தான் இருக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். சேலத்தில் அவர் பேசியதாவது “சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறிய ஸ்டாலின், தற்போது சொந்த கட்சியினரை பார்த்தே பயப்படுகிறார். அதிமுக ஆட்சியில் ஏழைமக்களுக்காக கொண்டுவரப்பட்ட திருமண உதவிதிட்டம், அம்மா இருசக்கர வாகனத் திட்டம், முதியோர் உதவித் தொகை திட்டம் ஆகியவற்றை முடக்கி விட்டனர்.

எனவே ஏழைகள் வயிற்றில் அடித்தால் அவர்களின் பாவம் சும்மாவிடாது. தேர்தல் நேரத்தில் அளித்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகளான இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை என்ன ஆனது?… 16 மாத தி.மு.க ஆட்சியில் எந்த புது திட்டமும் வரவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டங்களைத் தான் திறந்து வைக்கின்றனர். லஞ்சம் வாங்குவதில் திமுக முதன்மை அரசாக உள்ளது என்று அவர் பேசினார்

Categories

Tech |