இந்தியாவின் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு பணம் வழங்க இயலாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அதில் நிர்மலா சீதாராமன் பல்வேறு பட்ஜெட் கணக்குகளை தாக்கல் செய்தார். அது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தன. சில திட்டங்கள் மக்களை வறுமை நிலைக்குத் தள்ளும் வகையில் இருந்தன. இந்நிலையில் வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்கள் நிதி வழங்காத வரை, ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு பணம் வழங்க இயலாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தொடங்கிய சீர்திருத்தங்களின் அடிப்படையில்தான் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு பயனளிக்கக்கூடிய பட்ஜெட் இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.