தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனை கவுரவப்படுத்தி மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
அபிராமி ராமநாதன் சினிமா தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றவர்.
ஏழை, எளியவர்கள் பயனடையும் வகையில் தன் சொந்த செலவில் பல மருத்துவ மையங்களை அமைத்து உதவி செய்து வருகிறார். எனவே மத்திய அரசு அவரை கவுரவிக்கும் வகையில் அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. அபிராமி ராமநாதன் உருவம் பதித்த அஞ்சல்தலை ஐந்து ரூபாய் மதிப்பு உள்ளதாகும்.