Categories
மாநில செய்திகள்

இந்த ஏழை தாய்மார்களின் சிரிப்பே…. நமது அரசின் சிறப்பு – முதல்வர் ஸ்டாலின் டுவீட்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் ரூ.2000, மற்றும் 14 மளிகை பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு அரசின் நலத்திட்ட உதவிகளை வாங்கிய மூதாட்டிகள் புன்னகை புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இது குறித்து, இந்த ஏழைத்தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு என முதல்வர் ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.

Categories

Tech |