Categories
தேசிய செய்திகள்

ஏழை பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்…. ஒரே மீன் தான்… எவ்ளோ ரூபாய் தெரியுமா…?

ஆற்றில் கிடைத்த ஒரு மீனால் ஏழை பெண்ணொருவர் லட்சாதிபதி ஆகிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

மேற்கு வங்கத்தில் இருக்கும் சாகர் தீவை சேர்ந்த புஷ்பா கார் என்ற பெண் ஆற்றில் இருந்து பெரிய மீன் ஒன்றை பிடித்தார். அதோடு அந்த மீனை கிலோவுக்கு 6,200 ரூபாய் வைத்து உள்ளூர் சந்தையில் 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்தார். ஒரு மீன் தனக்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து கொடுத்ததால் அது தனக்கு ஜாக்பாட் என்று புஷ்பா கூறி வருகிறார்.

இப்படி ஒரு மீனை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை இது போலா மீன் என்று அழைக்கப்படும் என புஷ்பா தெரிவித்துள்ளார். உள்ளூர் மக்கள் கூறுகையில் 52 கிலோ கொண்ட அந்த மீனை கிராமத்திற்கு ஆற்றிலிருந்து கொண்டுவர அந்தப் பெண் மிகவும் கஷ்டப்பட்டார். உள்ளூரில் இருந்த மக்கள் உதவியுடன் அந்த மீன் சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த மீன் கப்பல் மோதி இறந்திருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஒருவேளை அந்த மீன் சிதைவடையாமல் இருந்திருந்தால் இன்னும் அதிக விலை கொடுத்து இருப்பார்கள் என ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். பிளப்பேர் எனப்படும் அந்த மீன் கொழுப்பு தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதோடு அதிகவிலைக்கு விற்கப்படுகிறது.

Categories

Tech |