டெல்லியில் ஒரு ரூபாய்க்கு ஒரு மதிய சாப்பாடு கிடைக்கும் வகையில் புதிய கேன்டீனை நாளை பாஜக எம்பி கௌதம் கம்பீர் திறந்து வைக்கிறார்.
டெல்லியில் கிழக்கு தொகுதியில் பாஜக எம்பி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் ஒரு கேன்டீனை திறந்து வைக்க உள்ளார். அதில் ஒரு ரூபாய்க்கு மதிய சாப்பாடு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனைப் போலவே குடியரசு தினத்தன்று டெல்லி அசோக் நகரில் மற்றொரு கேண்டீணையும் திறக்க உள்ளார். மேலும் டெல்லியில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளும் திறக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு டெல்லி பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏழை மக்கள் அனைவரும் ஒரு ரூபாய் கொடுத்து மதிய சாப்பாடு சாப்பிடும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் அனைவரும் பயன் பெறுவார்கள்.