Categories
தேசிய செய்திகள்

“திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய பக்தர்” எதற்காக தெரியுமா?… குவியும் பாராட்டு….!!!!!

துபையில் வசித்து வரும் ஒருபக்தர் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூபாய் 1 கோடியை நன்கொடையாக வழங்கி தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தி இருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏழை மற்றும் இல்லாதவர்களுக்கு உதவும் அடிப்படையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளையின் நலத்திட்டங்களுக்கு இந்த நன்கொடையைப் பயன்படுத்துமாறு அந்த பக்தர் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதாவது திருமலை திருப்பதிக்கு நேரில் வந்து சாமி தரிசனம் செய்த துபையில் கணக்குத் தணிக்கையாளராக பணிபுரியும் எம்.ஹனுமந்த குமார், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகி ஒய்வி சுப்பா ரெட்டியிடம் ஒரு கோடிக்கான வரைவோலையை வழங்கினார்.

Categories

Tech |