ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய அரசின் 2022- 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்த பட்ஜெட் குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கிராமப்புற பொருளாதாரம் தொடர்ந்து இறங்கிய வண்ணம் உள்ள நிலையில் வரிச்சுமை வேறு அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க இந்த பட்ஜெட் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் விதமாக அமைய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
வைரஸ் பரவல் மற்றும் அதன் தாக்கங்கள் கிராமப்புற மக்களை அதிக அளவில் பாதிப் அடைந்துள்ளதாகவும் பொருளாதாரமும் நலிவடைந்து வருவதாகவும் கூறியுள்ளார். கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் சென்ற ஆண்டில் 53 நாட்களும் நடப்பாண்டில் 40 நாட்களும் மட்டுமே வேலை வழங்க முடிந்திருக்கிறது. இதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புற மக்களுக்கு போதிய அளவில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் அவர்கள் 150 நாட்கள் வேலைக்கு செல்லுமாறு அந்தத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை மாற்றியமைக்க வேண்டும் எனக் கூறினார். வருமான வரி வரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் மேலும் ஒரு லட்சம் வரை உள்ள வருமான வரியை கழிக்க வேண்டும் என கூறினார் . தொடர்ந்து பேசியவர் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் எனவும் கூறினார்.