உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஒடேசா நகரம் முழுவதும் சின்னாபின்னமானது. இதில் ஒடேசா நகரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு 18 பேர் மாயமாகினர் . இந்த ஆறு பேரில் ஒரு தாய் மற்றும் அவருடைய 3 மாத குழந்தையும் அடங்கும்.
முன்னதாக பலியான அந்த இளம்பெண் தான் கர்ப்பமாக இருந்தபோது அந்த குழந்தையை தொட்டு பார்த்தவாறு எடுத்த புகைப்படமும், அந்த குழந்தை 3 மாத சிசுவாக இருக்கும்போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் எம் பி லிஸியா தன்னுடைய இணையதள பக்கத்தில் இவர்கள்தான் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகள் என குறிப்பிட்டுள்ளார்.