Categories
உலக செய்திகள்

ஏவுகணை தாக்குதல்களை தீவிர படுத்திய ரஷ்யா… உக்ரைனின் பல பகுதிகளில் மின்வெட்டு…ஜெலன்ஸ்கி தகவல்….!!!!!

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யாவின் படைகள் போர் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்தது. இருப்பினும் இரு தரப்பிலும் பெரிய அளவிலான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரில் ரஷ்ய இராணுவம் உக்ரைனில் சில பகுதிகளை கைப்பற்றியுள்ளது. ரஷ்ய இராணுவம் கடந்த மார்ச் மாதம் உக்ரைனின் கெர்சன் பகுதியை கைப்பற்றிய நிலையில் அதனை உக்ரைன் படை கடந்த மாதம் போராடி மீட்டது.

இந்நிலையில் உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படை ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல்களால் பெரும்பாலான பகுதிகளில் உறைபனி  வெப்பநிலைக்கு மத்தியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக கீவ் பிராந்தியம் மற்றும் தலைநகரம், எல்லிவ் பகுதி,ஓடெசா மற்றும் பிராந்தியம் கெர்சன் மற்றும் பிராந்தியம், வின்னிட்சியா பகுதி டிரான்ஸ்கார்பதியா போன்ற பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் முழுவீச்சுடன்  ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதனால் அவர்களின் ஏவுகணை குறைந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியின் செயல்பாடுகள் ரஷ்யாவிற்கும் அதன் குடிமக்களுக்கும் நீண்ட காலத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |