Categories
உலக செய்திகள்

“ஏவுகணை மழையைப் பொழியும்” ரஷ்யா… கவலைக்கிடமான “தமிழ் மாணவர்களின்” நிலைமை…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து அந்நாட்டின் தலைநகருக்கு அருகேவுள்ள வினிட்சியா பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அங்கே இருக்கும் சுரங்க அறையில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 2 ஆவது நாளாக போரைத் தொடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. இவ்வாறு இருக்க ரஷ்யா உக்ரைனிலுள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் தலைநகர் கீவுக்கு அருகேவுள்ள வினிட்சியா பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் அங்குள்ள சுரங்க அறைகளில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுரங்கப்பாதைகளிலிருக்கும் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களில் ஒருவர் கூறியதாவது, தாங்கள் சுரங்கப்பாதையில் பாதுகாப்பாக இருப்பதாகவும், அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |