ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று அமித்ஷா கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி ஏ.ஆர்.ரகுமானின் லேட்டஸ்ட் ட்விட்டர் பதிவு பேசுபொருளாகியுள்ளது. “இன்பத்தமிழ் எங்கள் உரிமை செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசன் பாடலை பதிவிட்டவர், இந்தித் திணிப்புக்கு எதிராக தன்னுடைய குரலை கொடுக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். இந்தி திணிப்புக் கொதிரான நிலைப்பாட்டை முன்வைத்து கருத்து கூறியதற்காக அச்சுறுத்தமுனைவது கண்டிக்கத்தக்கது என அவர் கூறியுள்ளார்.