நடிகர் சிம்பு ஏ.ஆர்.ரஹ்மான் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் மாநாடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் குக் வித் கோமாளி 2 கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார் .
இந்நிலையில் நடிகர் சிம்பு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகன் அமீனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தயாரிப்பில் 99 சாங்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கான பிரீமியர் ஷோவில் சிம்பு கலந்து கொண்ட போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.