Categories
சினிமா

 ஏ.ஆர். ரஹ்மான் மகள் திருமணம்…. வெளியான புகைப்படம்…. வைரல்…..!!!!!

ஏ.ஆர். ரகுமானின் மகள் கதிஜா ரகுமானுக்கும், ஆடியோ இன்ஜியரான ரியாசுதீன் சேக்கிற்கும் சென்ற வருடம் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் நெருங்கிய சொந்தங்கள், நட்பு வட்டாரத்துடன் சென்னையில் நேற்று முன்தினம் எளிமையாக திருமணம் நடந்தது. திருமணம் சுபநிகழ்ச்சிக்கு பிறகு மகள், மருமகன் மற்றும் குடும்பத்தாருடன்இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை  ஏ.ஆர். ரஹ்மான் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

மேலும் புதுமண தம்பதியை இறைவன் ஆசிர்வதிக்கட்டும் என்றும் அனைவரது அன்பிற்கும் முன்கூட்டியே நன்றி என்றும் குறிப்பிட்டார். அத்துடன் ஏ.ஆர். ரஹ்மான் தாயார் புகைப்படத்துடன் அவர் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளதோடு, புதுமண தம்பதிக்கு பெரும்பாலானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |