ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பஜாரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது ஏ.டி.எம் கார்டு எந்திரத்தில் மாட்டிக் கொண்டதால் வாலிபர் போதையில் தனது கைகளால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துள்ளார். இதனையடுத்து போதையில் வாலிபர் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார்.
மறுநாள் காலை ஏ.டி.எம் மையத்திற்குள் வாலிபர் படுத்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த அஸ்வின் நாயக் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அஸ்வினை கைது செய்தனர்.