சென்னை போரூரில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நடவடிக்கை தொடர்பான விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி சாலையில் கர்நாடக வங்கி கிளையில் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது .நேற்று இரவு காவலாளி பணியில் இல்லாத நேரத்தில் அங்கு நுழைந்த ஒருவன் ஏ.டி.எம் எந்திரத்தை ஆயுதங்கள் மூலம் உடைத்து கொள்ளையடிக்க முயன்று உள்ளான். ஐதராபாத்தில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறையில் சி.சி.டிவி கேமரா மேற்பார்வையின் போது இதனை கண்ட பாதுகாப்பு ஊழியர்கள் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம் மையத்திற்கு வந்துள்ளனர். ஆனால் போலீசார் அவ்விடத்துக்கு செல்வதற்குள் கொள்ளையன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளான். ஏ.டி.எம் இல் வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் தப்பிய நிலையில் சி.சி.டிவி காட்சி அடிப்படையில் கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்