Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏ.டி.எம் எந்திரத்தை கடப்பாரையால் உடைத்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இங்கு காவலாளி நியமிக்கப்படவில்லை. நேற்று காலை ஏ.டி.எம் மையத்தின் கதவு திறந்து கிடந்ததால் பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கடப்பாறை கம்பியால் மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது, ஆள் நடமாட்டம் இருந்ததால் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு தப்பி சென்றிருக்கலாம். இதனால் ஏ.டி.எம் எந்திரத்திற்குள் இருந்த 5 லட்ச ரூபாய் பணம் தப்பியது. ஏ.டி.எம் மையத்தில் திருட முயன்றவர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |