Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் மையத்திலிருந்து வந்த தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

ஏ.டி.எம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளி சாலையில் குமரன் லே-அவுட் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்மநபர் ஒருவர் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்த எச்சரிக்கை தகவல் தனியார் வங்கி அதிகாரியின் செல்போன் எண்ணிற்கு சென்றுள்ளது. அதன்பின் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து வங்கி அதிகாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |