ஏ.டி.எம் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்ச ரூபாய் எரிந்து நாசமானது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சடையம்பட்டி யில் இருக்கும் தனியார் கல்லூரி வளாகத்தில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று மின்கசிவு காரணமாக ஏ.டி.எம் எந்திரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏ.டி.எம் மையத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீவிபத்தில் ஏ.டி.எம் இயந்திரம், அதில் இருந்த பல லட்ச ரூபாய் பணம், சிசிடிவி கேமரா, குளிர்சாதன எந்திரம் ஆகிய அனைத்தும் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.