Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியை சமாளித்த கேரளா பிளாஸ்டர்ஸ்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டி கோல் ஏதுமின்றி சமனில் முடிவடைந்தது.

இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதனிடையே அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்ற லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் – கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் இரு அணி வீரர்களும் டிபென்சிப் (தடுப்பு) ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி இருந்தது.

இதையடுத்து பின்னர் தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்திலும் அதே நிலை நீடித்து. இருப்பினும் நார்த் ஈஸ்ட் அணி வீரர்கள் தங்களுக்கு கிடைத்த கோல் வாய்ப்புகளை வீணடித்தனர்.

இறுதியில் இப்போட்டி கோல் ஏதுமின்றி சமனில் முடிவடைந்தது. இப்போட்டிக்குப்பின் கேரளா அணி எட்டாவது இடத்திலும், நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.

Categories

Tech |