Categories
மாநில செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரிகள்….. “ஜனவரி 31க்குள் இதை செய்ய வேண்டும்”…. தலைமை செயலாளர் உத்தரவு!!

தமிழகத்தில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..

தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து அதிகாரிகளுக்கும் தலைமை நிலையில் இருக்கிறார். இவர் தற்போது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. அதில், “தமிழகத்தில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.. ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் குடும்ப உறுப்பினர் சொத்து விவரங்களையும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஜனவரி 31ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்யவேண்டும்.

சரியான காரணமின்றி சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.. தமிழகத்தை பொருத்தவரை 400க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்.. அவர்கள் அனைவருக்கும் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது..

Categories

Tech |