பொறியியல் உள்ளிட்ட எந்தவொரு துறைகளிலும் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் களுடன் இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்துடன் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் இரண்டு ஆண்டு வணிக நிர்வாக முதுகலை படிக்க வாய்ப்பு உள்ளது. IIIM -CAT 2021 மதிப்பெண் அடிப்படையில் குழு விவாதங்கள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. மேலும் IIT களில் 8 CGPA பெற்ற BE/BTech உள்ளிட்ட இளங்கலை பட்டதாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கு CAT மதிப்பெண் தேவையில்லை. இந்நிலையில் 2022-24 ஆம் ஆண்டிற்கான முழுநேர எம்பிஏ/ மேனேஜ்மென்ட் பிஜி திட்டங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐஐடி சென்னை (https://doms.iitm.ac.in), மும்பை-SJMSOM (www.som.iitb.ac.in), டெல்லி டிஎம்எஸ் (https://doms.iitd.ac.in) , குவஹாத்தி-SOB (www.iitg.ac.in/sob), கான்பூர்-IME (www.iitk.ac.in/ime), ISM தன்பாத்-DOMS (www.iitism.ac.in/dms), ஜோத்பூர்-SME (https:/ /iitj.ac.in), காரக்பூர்-VGSOM (https://som.iitkgp.ac.in/MBA), ரூர்க்கி-DOMS (https://ms.iitr.ac.in). இந்த அறிவிப்பு அந்தந்த ஐஐடி இணையதளத்தில் உள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 800
விண்ணப்ப தேதி: ஜனவரி 31 வரை
விண்ணப்ப முறை : ஆன்லைன்
இரண்டு வருட பணி அனுபவம் உள்ள பட்டதாரிகள் தங்கள் முதலாளி மூலம் ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரிவில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டு மாணவர்கள் GMAT மதிப்பெண் பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.