சென்னை ஐஐடியின், பி.எஸ்.சி டேட்டா சயின்ஸ், ஆன்லைன் படிப்பிற்கு 20ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். தேசிய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் பி.எஸ்.சி., டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் ஆன்லைன் படிப்புகள் நடத்தப்படுகிறது. மே மாத பருவத்தில் சேர,https://online degree.iitm.ac.in/என்ற இணையதளத்தில் வரும் 20ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிளஸ் டூ முடித்த அனைவரும் இந்த படிப்பை படிக்கலாம். தற்போது பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் தகுதி சுற்றுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். தகுதி பெறும் நிலையில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற பின் படிப்பை துவங்கி கொள்ளலாம் என சென்னை ஐ.ஐ.டி அறிவித்துள்ளது.
Categories