Categories
தேசிய செய்திகள்

ஐஐடி: பட்டியலின மாணவர்கள் வெளியேறும் கொடுமை…!!!!

நாட்டின் 7 ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவில் சேர்ந்த பட்டியலின மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டுவெளியேறுவது கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. அதில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் 40% முதல் 72% வரை பட்டியலின மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டு வெளியேறுவது தெரியவந்துள்ளது.

நாட்டின் 7 ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்பில் இருந்து பாதியில் வெளியேறும் 10 மாணவர்களில் 6 பேர் இட ஒதுக்கீட்டு பிரிவினர் என்று ஒன்றிய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. இடை நிற்றல் அதிகரித்துள்ள உயர் கல்வி நிறுவனங்கள் வரிசையில் அசாம் மாநிலம் கவுகாத்தி ஐஐடி 88% என்ற நிலையில் முதல் இடத்தில் உள்ளது.

டெல்லி ஐஐடி 2018ம் ஆண்டில் படிப்பை பாதியில் விட்ட 10 மாணவர்களும் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்தவர்கள் தான். அங்கு 2019ம் ஆண்டில் இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் 76% பேர் படிப்பை பாதியில் விட்டு வெளியேறி உள்ளனர்.சென்னை ஐஐடியில் கடந்த 5 ஆண்டுகளில் படிப்பை பாதியில் விட்டு வெளியேறிய மாணவர்களின் எண்ணிக்கை 10 பேர் ஆகும். இவர்களில் 6 பேர் பட்டியலின மாணவர்கள் என்றும் எஞ்சிய 4 பேர் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |