சென்னை ஐகோர்ட் நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியுடனான கலந்துரையாடலுக்கு பிறகு 7 மாநில ஐகோர்ட்டு நீதிபதிகளை ஜனாதிபதி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அவர் பிறப்பித்த உத்தரவில் பஞ்சாப் ஐகோர்ட்டு நீதிபதி ராஜன்குப்தா பாடானாவுக்கும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் கல்கத்தாவுக்கும், இமாச்சல் பிரதேச ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்வார் தாகூர் பஞ்சாபிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா ஆகிய இருவரும் பார்ட்னரை கோட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதி அமர்நாத் கவுட் திரிபுரா ஐகோர்ட்டுக்கும், அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி சுபாஷ் சந்த் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.