ஐபிஎல் போட்டி தொடங்கிய உடன் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கிரிக்கெட் வாரிய நிர்வாகம் கூறியுள்ளது.
இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 13-வது ஐபிஎல் போட்டியின், 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கின்ற துபாய், அபுதாபி, ஜார்ஜியா போன்ற இடங்களில் அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.இந்தப் போட்டியில் தொடர்புடையவர்கள் அனைவரும் பின்பற்றவேண்டிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் தயாரித்திருக்கிறது. அது அது தொடர்பான தகவல்களை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். ஐபிஎல் அணிகளில் உள்ள இந்திய வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்தியாவில் தங்களுடைய அணிகளுடன் இணைவதற்கு ஒருவாரத்திற்கு முன்னரே 24 மணி நேரத்திற்குள் இரண்டு முறை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
தங்களது அணியுடன் சேர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள். முதற்கட்ட பரிசோதனையில் எந்த வீரருக்காவது கொரோனா இருப்பது உறுதி ஆகினால் அந்த வீரர் உடனடியாக தனிமைப் படுத்தப் படுவார். அதன் பிறகு 24 மணி நேரத்திற்கு பின்னர் இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகு அந்த வீரர் அமீரகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார். அமீரகம் சென்றஉடன் வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் ஒருவாரம் தனிமையில் இருப்பார்கள். அந்தக் காலகட்டத்தில் குறைந்தது மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அந்தப் பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டவுடன் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு பயிற்சியை அனைவரும் தொடங்குவார்கள்.
அதன்பிறகு ஐபிஎல் போட்டி தொடங்கியவுடன் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வீரர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.வெளிநாட்டை சேர்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பொறுத்தவரையில் அமீரகம் புறப்படுவதற்கு முன்னர் இரண்டு முறை பரிசோதனை கட்டாயம் செய்துக்கொள்ள வேண்டும். அந்தப் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தால் மட்டுமே அமீரகம் செல்ல இயலும். கொரோனா பாதிப்பு இருந்தால் 14 நாட்கள் தனிமை அதற்குப் பின்னர் மேலும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி கூறியுள்ளார்.