ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நூதன முறையில் கடத்த முயன்ற 50 கிலோ போதைப் பொருளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். காட்டன் சட்டைகளில மடிப்பு கலையாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் அட்டைகளில் இந்த போதைப் பொருட்களை மறைத்து வைத்து கடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. சுமார் 1500 காட்டன் சட்டைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் 515 சட்டைகளில் போதைப்பொருட்கள் நிரப்பப்பட்டு கடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
Categories